SV

Quotes by Su. Venkatesan

Su. Venkatesan's insights on:

"
மனித மனத்தை இயக்கும் விசையை அறிதலே கலையின் உச்சம்.
"
ஏமாற்றம் எதில் நடக்கிறது என்பதை பொருத்துதான் மனிதமனம் எப்படி அதை எடுத்துக் கொள்கிறது என்பது தெரியவருகிறது.
"
பெரும் உண்மைகள், எளிய கேள்விகளுக்குள் தலை நுழைத்துதான் வெளிவருகின்றன.
"
ஒருநிலைக்குப்பின் வெற்றி ஏற்படுத்தும் சுவை பழக்கப்பட்டதாக மாறிவிடுகிறது. அது செய்தியாக தன்னைத்தானே கீழிறக்கிக்கொள்கிறது.
"
அரசர்கள் நாட்டை ஆள்கிறார்கள், வணிகர்கள் அரசர்களை ஆள்கிறார்கள்
"
வாழ்வு எந்தக் கணத்திலும் முடிந்துவிடும். ஆனால், அறத்தின் அழிவுக்கான காரணம் நமது வாழ்வின் மீது படியுமேயானால் அதைவிட இழிவு வேறில்லை.
"
தீயவர்களின் வீழ்ச்சி மகிழ்வை கொடுக்கும்; பாதிப்பை ஏற்படுத்தாது. நல்லவர்களின் வீழ்ச்சி துயரத்தோடு நிற்காது; பெரும்பாதிப்பை உருவாக்கும்.
"
நெருப்பைவிட அதிகமாக சுடக்கூடியது கதை. நெருப்புக் கொண்டும் எரிக்கமுடியாதது கதை.
"
மனிதனுக்குள் அவமானத்தைத் துளையிட்டு உள்நுழைக்கிற கருவி, சொற்களின்றி வேறில்லை.
"
எரிந்து மறைதலும், ஒளிர்ந்து அடங்குதலுமே வாழ்வு. இருளை விலக்கத்தான் முடியும்; அழிக்கமுடியாது. ஓளிகொண்டு கண்டறியப்படும் உண்மை அதுதான். மரணமும் அப்படித்தான்!
Showing 1 to 10 of 39 results